search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்கள்"

    • கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெய ப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டி க்கொண்டு புறப்பட்டனர்.

    வாளவாடி பிரிவு அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் விழுந்தனர்.

    அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை பறித்து காரில் தப்பினர்.

    இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் பிரகாசும், சரவணனும் நிம்மதி அடைந்தனர்.

    மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியதுடன், பாருக்குள் மதுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கடை விற்பனையாளர்கள் சண்முகநாதன், குமார், பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், காமராஜ், முருகானந்தம் ஆகியோரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் இழப்பீட்டு தொகையாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், ஒரிசாவை போல தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, திருமா பாண்டி, நிர்வாகிகள் தேவா அருள்ராஜ், பெரியசாமி, ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.

    தமிழக அரசின் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.

    மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை போக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு அமைக்க வேண்டும். தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும் என்பன உள்பட பல்ேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற நவம்பர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், 2023 ஜனவரி மாதத்தில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ×